நாமக்கல்

உலகப் புகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் அபிஷேக குழு சார்பில் சிறப்பு தங்ககவச அலங்காரம் மற்றும் தங்கத்தேர் உற்சவம்
நாமக்கல் மாநகரில் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில் எதிரே ஸ்ரீ நரசிம்ம சுவாமியை வெட்ட வெயில்/ மழை பாராமல், இருகரம் கூப்பி வணங்கி நிற்கும் 18 அடி ஒற்றைகல்லிலால் ஆன உலக புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் அபிஷேக விழாக் குழுசார்பில் 37-ம் ஆண்டாக விழாவில் அதிகாலை நடை திறக்கப்பட்டு வடமாலை சாற்றப்பட்ட பின் பட்டாச்சாரியார்கள் நல்லெண்ணெய் பஞ்சாமிர்தம்/பால் தயிர்,மஞ்சள் சந்தனம், உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் நாமக்கல் நரசிம்மர் மற்றும் ஸ்ரீ நாமகிரிதாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஆஞ்சநேயர் அபிஷேக குழுவைச் சேர்ந்த சேலம் சங்கமேஸ்வரன், ஈரோடு டாக்டர் மஞ்சுநாதன், ஈரோடு சந்தோஷ்குமார், பண்டமங்கலம் சுப்பிரமணியம், ஈரோடு விஜயகுமார், சேலம் தனபால் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
இதில் நாமக்கல், சென்னை,சேலம்,
ஈரோடு,கரூர்,மதுரை, திருச்சி,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆஞ்சநேயர் அபிஷேக குழுவினர் கலந்து கொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வணங்கிச் சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *