போடி அருகே துர்நாற்றத்துடன் புழுக்கள் கலந்து வரும் குடிநீரால் கிராம மக்கள் அதிர்ச்சி தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது சுந்தரராஜபுரம் போடி ஒன்றியம் போடி அம்மாபட்டி ஊராட்சி இதன் உட்கடை கிராமம் சுந்தரராஜபுரம் இந்த கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராம பகுதி என்பதால் முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து . வருவது கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இந்த நிலையில் இவர்களுக்கு அம்மாபட்டி ஊராட்சி சார்பில் சுந்தரராஜபுரம் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இப்படி வரும் குழாய் நீரில் இறந்து போன மீன் கழிவுகள் நீரில் கலந்து கொழுப்பு போன்ற வெண்மையான படிவம் படிந்து வருவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். இந்தக் குழாய் நீரை குடிக்க மட்டுமல்ல கால்நடைகளான மாடுகளுக்கு கூட வழங்க முடியாத நிலை உள்ளது.

அம்மாபட்டி ஊராட்சிக்கு பாத்தியப்பட்ட சுமார் 5 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மீனாட்சி அம்மன் கண்மாய் உள்ளது. இந்த கண் மாயை நம்பி மீனாட்சிபுரம் பொட்டல்குளம் விசுவாசபுரம் பத்ரகாளிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 5000 ஏக்கர் பரப்பளவுக்கு விவசாய பாசன வசதிக்கும் பல்வேறு கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு மக்களின் குடிநீர் தேவைக்கும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த கண்மாயில் செல்பி கொண்டை கட்லா கெளுத்தி போன்ற நாட்டு மீன்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது

இந்த கண்மாயில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரராஜபுரம் கிராமத்துக்கு குழாய்கள் மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்த கண்மாயில் இருந்து வரும் தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது தற்பொழுது கோடை காலம் என்பதால் கோடை மழை கூட சரி மழை பெய்யாததால் அணையில் நீர் இருப்பு கம்மியாக உள்ளது

இதன் காரணமாக கண்மாயில் நீர் வற்றி வருவதால் கண்மாய் நீர் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாகவும் அதன் காரணமாக கண்மாயில் நீர் வற்றி வருவதால் கண்மாய் நீர் நிறம் மாறி வருகிறது மட்டுமில்லாமல் சுற்றுப்பகுதியில் உள்ள கடைகளில் மீதமாகும் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கண்மாயில் கொட்டப்பட்டு வருகிறது

இதனால்தண்ணீர் மாசுபடுகிறது மாசுபட்டு வரும் தண்ணீரை சுந்தரராஜபுரம் கிராம மக்களுக்கு விநியோகிக்கப்படுவதால் அந்த குடிநீர் துர்நாற்றம் வீசி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இந்த குளத்தில் தற்பொழுது கொளுத்தி வரும் கோடை வெயிலால் கடும் வெப்பம் காரணமாக இறந்து கிடக்கும் மீன்கள் நாளடைவில் தண்ணீரில் கரைந்து சுந்தரராஜபுரம் கிராமத்துக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேரடியாக விநியோகிக்கப்படும் தண்ணீரில் கலந்து வருவதால் குழாயில் இருந்து வரும் தண்ணீர் வெள்ளையாக கொழுப்பு போன்ற திரவம் கலந்தும் சிறு சிறு கருப்பு நிற புழுக்கள் கலந்து வருவதாக கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதுபோல் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வருவதால் சல்லடை வைத்து பிடித்தாலும் சிறிது நேரத்திலேயே கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே போடி ஒன்றிய நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுத்து தற்பொழுது கோடைகாலத்தில் மக்களுக்கு குடிநீரின் அவசியம் கருதி குடிநீர் சுகாதாரமாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *