கலை திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற -கண்ணனூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ ஸ்டாலின் குமார் பாராட்டு
துறையூர் டிச-05
திருச்சி மாவட்டம்,துறையூர் அருகே உள்ள கண்ணனுர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவ & மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை விதமாக சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார் பொன்னாடை அணிவித்து ரூபாய் 10,000 ரொக்கம் வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாடு அரசு வருடம் தோறும் பள்ளி மாணவ & மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்வான கலைத் திருவிழா போட்டி இந்தாண்டு நடைபெற்றது.
இதில் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.இந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் ரொக்கம் வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினார்.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, கண்ணனூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி குமார், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ & மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்