கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அப்பொழுது திருப்பரங் குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதி மறுத்ததை கண்டித்தும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் கரு.மாரிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் , மாவட்ட பொதுச் செயலாளர் காரமடை விக்னேஷ், மேட்டுப்பாளையம் நகர தலைவர் சரவணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்