பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாள்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் நடைபெற்றது.முன்னாள் மாவட்ட செயலாளர் உறவழகன் தலைமை வகித்தார் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் முத்தமிழ்செல்வன், டாஸ்மாக் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை,அரசு ஊழியர் சங்க ஐக்கிய பேரவை அமைப்பாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் நெப்போலியன் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
நிகழ்ச்சியில் பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி , வர்த்தகர் அணி மாவட்ட அமைப்பாளர் லண்டன் குணா,ஒன்றிய பொருளாளர் சம்சா ரமேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகேசன், ஓவியர் அணி அமைப்பாளர் கலைஞர் ரமேஷ், பாபநாசம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெகதீசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அண்டக்குடி ஜெயக்குமார், ஆதனூர் முகாம் செயலாளர் பிரபு, ஒன்றிய துணை செயலாளர்கள் ஆட்டோ கலை, கலைச்செல்வன்,பாபநாசம் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், முன்னாள் தொகுதி செயலாளர் சுடர் வளவன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் நதியா முத்தமிழ்செல்வன், நிர்வாகிகள் கார்த்திக் திருமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.