திண்டுக்கல் நகர் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மலைக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 10 ஆயிரம் தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது. மேலும் கோட்டை குளத்தில் ஜல தீபமும் மலை கோட்டை மத்தியில் மலை தீபமும் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில், அபிராமி அம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர். வீரக்குமார் மலையடிவாரம் ஆஞ்சநேயர் திருக்கோயில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்.விக்னேஷ் பாலாஜி உபயதாரர்கள்.சதீஷ், மனோஜ் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் முன்னாள் அறங்காவலர். ராமானுஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.