பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

உள்ளிக்கடை ஊராட்சியில் சாலை வசதி செய்து தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாலையில் நடைபயண பேரணி வட்டாட்சியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் தீர்வு …..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம்
உள்ளிக்கடை ஊராட்சியில் மாதாகோவில்தெரு , மாரியம்மன் கோவில் தெருவில் சாலை வசதி செய்து தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ச.தமிழன் தலைமையில் உள்ளிக்கடை மெயின்ரோடு
பஸ் ஸ்டாப் லிருந்து பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் வரை 21.08.2023 திங்கள் கிழமை 10 மணியளவில் 15 கிலோமீட்டர் சாலையில் நடைப்பயண பேரணி நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

இதனை ஒட்டி பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் வட்டாட்சியர் பூங்கொடி தலைமையில் நடைப்பெற்றது.

இதில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார் , சப் – இன்ஸ்பெக்டர் சேகரன் , மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளிக்கடை மாதாக்கோவில் தெரு, மாதாகோவில் தெரு இருஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என வட்டார வளர்ச்சி அதிகாரிஅவர்களால்
தெரிவிக்கப்பட்து.

இதனை ஏற்றுக்கொண்டு நடைபயண பேரணியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தற்காலியமாக. ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *