நாகரசம்பட்டி அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் பொது கணக்குக்குழு அமைப்பினர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் பொது கணக்குக்குழு அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர். ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மன்ற உறுப்பினர்கள் நபர்கள் கொண்ட குழுவில் தளி சட்ட மன்ற உறுப்பினர் ராமசந்திரன், பரமரத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு ஆகியோர் இருந்தனர்.

நாகரசம்பட்டி அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதிக்கு வந்தபோது, தரையில் உடைந்த டைல்ஸ்சை மறைப்பதற்காக மேட் போட்டு மறைத்தருந்ததை கண்டு கண்டித்தனர்,

மேலும் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் அறையில் இருந்த மூன்று டியூப் லைட்டுகளும் எரியாததால், அவற்றை உடனடியாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாலைக்குள் இவற்றை சீர் செய்யாவிட்டால் சஸ்பென்ட் செய்யப்படுவீர்கள் என தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் பொது கணக்குக்குழு தலைவர் பெருந்தகை தெரிவித்தார். மேலும் விடுதி மாணவர்களிடம் தேவைகளை கேட்டார், அப்போது ஆர்.ஓ. வாட்டர் மற்றும் யுபிஎஸ் வசதி இல்லை என மாணவர்கள் தெரிவித்தனர். அவற்றை குறித்துக்கொண்டு உடனடியாக அவற்றிற்கு நடவடிக்கை எடுப்பதாக குழு சார்பாக உறுதியளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *