திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில்
சிம்மவிஷ்ணு பல்லவ நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார் சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன், முகமது ஜுபைர்,அசோக் காந்தி, ஹீராலால் முன்னிலை வகித்தனர்.

கிருஷ்ணகிரி சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் மதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிம்மவிஷ்ணு பல்லவ நாணயம் குறித்து பேசுகையில், தெற்கில் காஞ்சிபுரம் தாண்டி விரிவடைந்த முதல் பல்லவ மன்னர் சிம்மவிஷ்ணு ஆவார். பல்லவர்களின் மறுமலர்ச்சிக்கு சிம்மவிஷ்ணு தலைமை தாங்கினார். திருச்சியில் குடைவரை கோயில்கள் உள்ளன. குறிப்பாக லலிதங்குரா பல்லவேஸ்வர கிரஹம் (மேல் குகைக் கோயில்), மகேந்திரவர்மன் I (7 ஆம் நூற்றாண்டு) செதுக்கப்பட்டது, இவை சிவவிஷ்ணுவைப் பின்பற்றுவார்கள்.
சிம்மவிஷ்ணு பல்லவர்கள் கலப்பு உலோக நாணயத்தின் முன் பக்கம் வலதுபுறம் நோக்கி நிற்கும் சிங்கம். பின்புறம் சங்கு ஓடு சுற்றியுள்ள கோடுகள் பரவுகின்றன என்றார். நாணயங்கள் சேகரிப்பாளர்கள் சென்னை பூபதி, சேலம் பூபதி, பொள்ளாச்சி மணிகண்ட பிரபு, முகமது பைசல், துறையூர் பெரியசாமி, தஞ்சை முகமது மீரான், முகமது யூசுப், தாமோதரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்