திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் பணிக்கு ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி சக்சஸ் பாராட்டி சிறப்பித்தனர்.ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி சக்சஸ் சங்கம் சார்பில் ஜோதி ஆனந்தம் சிட்பண்ட் பிரைவேட் லிமிடெட் என்.ஆர். ஐ.ஏ.எஸ்.அகாடமி நிறுவனத்துடன் இணைந்து திரைப்படங்கள் இளைஞர்களை முன்னேற்ற பாதையில் வழி நடத்துகிறதா திசை திருப்பகிறதா தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி திருச்சி தேவர் அரங்கில் நடைபெற்றது
திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் 1995 ஆண்டு முதல் தமிழ் பணியில் ஈடுபட்டு மாதம் இருமுறை திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் கூட்டம் நடத்தி இயல், இசை, நாடகம் மூலம் தமிழை வளர்த்தெடுக்கிறது.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மேடை அமைத்து கொடுப்பதுடன் பேச்சாளர்களை அழைத்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்தி வரும் திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் தமிழ் பணியினைச் பாராட்டி . திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ்ச்செம்மல் கோவிந்தசாமி , செயலர் ஜெயலட்சுமி பொருளாளர் பாலமுருகன், துணைத்தலைவர்கள் அருணாச்சலம், மனநல மருத்துவர் லட்சுமி நந்தகுமார்,துணைச் செயலர் வைகுண்ட மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் லால்குடி முருகானந்தம், தணிக்கையாளர் நன்மாறன், இணைச் செயலர் விஜயகுமார், மன்ற ஆலோசகர் கவிஞர் மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர் கேசவன் உள்ளிட்டோரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி சக்சஸ் சாசனத்தலைவரும் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் விஜயாலன் தலைமையில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி சக்சஸ் தலைவர் சண்முக பிரசாத், செயலர் கார்த்திகேயன், பொருளாளர் ஜபிக்க அகமது முன்னிலையில் சிறப்பு விருந்தினர் ரோட்டரி சங்க ஆளுநர் கார்த்திகேயன்
பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.