அபிராமம் டவுனில் மழையால் நெடுஞ்சாலையில் பள்ளம். மராமத்து செய்ய உதவி கோட்ட பொறியாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை. அபிராமம் டிச8 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அஸாமம் முதுகுளத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பல இடங்களில் அபிராமம் நகர் பகுதியில் நெடுஞ்சாலையில் பள்ளங்கள் உள்ளன.
இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகின்றன. தற்போது அபிராமம் முதுகுளத்தூர் நெடுஞ்சாலையில் அபிராமம் நகருக்கு வெளியே மராமத்து பணிகள் உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆகையால் அபிராமம்நகர் பகுதியில் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடி சாலையை மராமத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல் டம் கோரிக்கை விடுத்துள்ளனர்.