மதுரையில் அம்பேத்கரின் 60 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் அதியமான் தலைமையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டியல் சமூக இட ஒதுக்கீடை வகைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் பேரணி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து அவுட் போஸ்ட் அம்பேத்கர் சிலை வரை பேரணி நடந்தது.
முன்னதாக தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் துவக்க உரையாற்றினார். ஆதித்தமிழர் பேரவை மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தஜோதி புறநகர் வடக்கு தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர்கள் சரவணன் விடுதலைசேகரன் நீதிவேந்தன்மற்றும் ஆதி தமிழர்பேரவை நிர்வாகிகள் தொண்டர்கள் பலர்கலந்துகொண்டனர்.
மதுரைமாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் சிறப்பாக செய்திருந்தார்.