பாப்பிரெட்டிப்பட்டி,
கடத்தூரில் கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து நேற்று 9-ம்தேதி வணிகர் சங்கத்தினர்சார்பில் காலை முதல் 12 மணிவரை கடைகளை மூடி தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம், கடத்தூரில் நேற்று முன்தினம் இரவு அன்பு (40) என்ற இளைஞர்,கடத்தூரில் நகை கடை வைத்திருக்கும் நாகராஜகுப்தா மற்றும் அருகில் உள்ள 3 ஜவுளிகடைகளில் புகுந்து கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் மற்றும் கடை ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கியும் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடத்தூரில் வியாபாரிகளின் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதலை கண்டித்தும், தொடர்ந்து பல்வேறு இது போன்ற சம்பவங்களில் மீது நடவடிக்கை எடுத்து, இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடையடைப்பு நடையடைப்பு நடைபெற்றது.