ஸ்ரீ பிலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயம் மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது
திருவொற்றியூர் அடுத்த சடையங்குப்பம் பர்மா நகரில் அமைந்திருக்கும் மிகவும் பழமை வாய்ந்த பீலிகான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயமானது பர்மாவிலிருந்து குடியேறி இங்கு நீண்ட ஆண்டுகளாக வசித்து வந்து குலதெய்வமாக வழிபடும் இந்த ஆலயத்தை புதுப்பிக்கப்பட்டு கடந்த ஆறாம் தேதி காலை கோ பூஜையுடன் விநாயகப் பிரார்த்தனை லட்சுமி ஓமம் உள்ளிட்ட பூஜைகளுடன் முதல் கால பூஜையானது துவக்கப்பட்டு யாக கலசங்களில் புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது வைக்கப்பட்டு பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி மற்றும் பரிவார மூர்த்திகள் கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து முதல் கால பூஜை துவங்கி அன்று மாலை இரண்டாவது கால பூஜை மூன்றாம் கால பூஜை என்று சிறப்பாக நடைபெற்று இன்று காலை நான்காம் கால பூஜை துவங்கப்பட்டு யாக கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து யாக குண்டங்களுக்கு பூரணாதி செய்யப்பட்டு யாக கலசத்தை ஊர் நிர்வாகிகள் மற்றும் கோவில் பூசாரிகள் தலையில் சுமந்தவாறு கோவில் பரிவாரம் மூர்த்திகளுக்கும் கோபுர கலசத்திற்கும் மேளதாளம் முழங்க கொண்டு சென்று கோபுர விமானத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரானது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது
இதில் பர்மா நகர் சடையங்குப்பம் திருவொற்றியூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு புனித நீர் ஆனது தெளிக்கப்பட்டு சிறப்பு விருந்து என்ன சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர். மதன். பிரசாதம் அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது