ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் அம்பேத்கர் கிராம நல மையம் இணைந்து இந்தியா 2047 இளைஞர்கள் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நிகழ்வு ஆகஸ்ட் 30 இன்று பாரத் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இளையோர்கள் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கத்தினை மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம். கணபதி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆர்.பாலகிருஷ்ணன் திட்ட உதவியாளர் நேரு யுவ கேந்திரா வரவேற்றார் ஆர்.பாலமுருகன் , முதல்வர் பாரத் கல்வியியல் கல்லூரி தலைமை வகித்தார் துணை இயக்குனர் நேரு யுவ கேந்திரா முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் என்.நடராஜன. மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் எஸ்.அன்பழகன் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் எம். ஆசைத்தம்பி மாவட்ட நூலகர், ஆர்.மோகன் சுந்தரி செயலாளர் நீடு தொண்டு நிறுவனம் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பஞ்சபிரான் என்ற மையக்கருத்து வலியுறுத்தி நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெருமைகளை பற்றி மீனாட்சி சுந்தரம் அவர்கள் துணை முதல்வர் பாரத் கல்வியியல் கல்லூரி, குடிமக்கள் தனது கடமைகளை உணர்தல் பற்றி சி.ராஜேந்திரன் அவர்கள் முன்னாள் ராணுவப்படை அதிகாரி, நம் நாட்டின் வளர்ச்சி பற்றி சுரேஷ் அவர்கள் பாரத் கல்லூரி, நாட்டு மக்களின் ஒற்றுமை பற்றி பன்னீர்செல்வம் இணை பேராசிரியர் அரசு மற்றும் அறிவியல் கல்லூரி திருத்துறைப்பூண்டி, அடிமைத்தனம் அல்லது காலனித்துவ மனோபாவத்தை நீக்குதல் பற்றிதிரு ஆர்.எஸ். முத்துக்குமார் டி என் சி டி டபுள்யூ ஆகியோர் கருத்துக்களை வழங்கினார்கள் நெல்சன் சூர்யா நன்றி கூறினார் சுமார் 250 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *