காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே தானிஷ் அகமது என்ற தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு தொழில் நிறுவனத்தோடு இணைந்து உருவாக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப மையத்தை முன்னாள் டிஜிபி முனைவர் ரவி IPS அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சமூதாய பணிகளில் சிறந்து விளங்கும் 5 நபர்களை அடையாளம் கண்டு கல்லூரி நிர்வாகம் விருதகளை வழங்கி வருகிறது

அந்த வகையில் CTS நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறையின் சீனியர் மேலாளராக பணிபுரியும் ரோபியா ரோஸ்,இளம் அறிவியல் அறிஞர் பிரதிக் உள்ளிட்ட 5 சாதனையாளர்களுக்கு முன்னாள் டிஜிபி முனைவர். ரவி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்வில் கல்லூரி செயலாளர் மூ.முகமது பாஷா , கல்லூரி இயக்குனர் முனைவர் பே. பரமசிவன். கல்லூரி முதல்வர் முனைவர் கோ. உமா கௌரி மற்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *