திண்டுக்கல் மாவட்டம் பழனி தாராபுரம் சாலையில் உள்ள 2வது வார்டு சத்யா நகர் பகுதியில் தொடர்ந்து நகராட்சி சார்பாக முறையான குடிநீர் வழங்கப்படுவது இல்லை மேலும் அப்பகுதியில் தெருவிளக்கு மின்சார வசதி சாக்கடை வசதி என்று அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் வந்தனர்.

மேலும் 2வது வார்டு கவுன்சிலராக கமலம்மாள் பழனிச்சாமி என்பவர் வெற்றி பெற்று கவுன்சிலராக வலம் வரும் நிலையில் தொடர்ந்து பலி வாங்கும் நோக்கில் நகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்…

அதிமுக கட்சியில் வெற்றி பெற்ற கமலம்மாள் பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தாராபுரம் சாலை இரயில்வே கேட் அருகே அப்பகுதி பொதுமக்களை அழைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களியே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்..

நகராட்சி நிர்வாகம் சார்பாக அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதாக நகராட்சி நிர்வாகம் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டன..

தொடர்ந்து இந்நிகழ்வில் தலைவர் மாரியப்பன்
செயலாளர் காளிமுத்து பிரதிநிதி மகேஸ்வரன் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் நாகராஜன் மாணிக்கம், மலைராஜ், மாரியப்பன், கருப்புசாமி, ராஜு, மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றன.

மேலும் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில் அதிமுக கவுன்சிலரின் வார்டு என்ற ஒரே காரணத்திற்க்காக தொடர்ந்து அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுத்து வருவதாகவும் கவுன்சிலர் கமலாம்மாள் பழனிச்சாமி குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *