பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பாட்டாளி மக்கள் கட்சி குறித்து தவறான செய்திகளை அவதூறாக பரப்பி வருவதாக அவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த பெரியதத்தூர் கிராமத்தில் வன்னியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க வைத்தி அவர்கள் வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார் இதில் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது.

கடலூர் மாவட்டம் வடலூரில் பாமகவின் 35 வது துவக்க பொது கூட்ட நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு எதிராக மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தனர் இதில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் பாட்டாளி மக்கள் கட்சி குறித்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தனர் அதற்கு பதிலடியாக அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்தார்

அதில் மருத்துவர் ஐயா அவர்களால் துவங்கப்பட்ட கட்சி அதற்கு ஒரு வரலாறு உண்டு இந்திய அளவில் இரண்டு ஒதுக்கீடுகளும் தமிழ்நாடு அளவில் 4 ஒதுக்கீடுகளும் ஆக மொத்தம் ஆறு இட ஒதுக்கீடுகள் பாமகவால் மட்டுமே கிடைத்தது.

மேலும் ரயில்வே திட்டங்கள் மக்கள் இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் திட்டங்கள் பொது இடங்களில் புகைபிடிக்க தடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி தான், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுநல வழக்காக மெரினா கடற்கரை பகுதியில் இனி வரும் காலங்களில் யாரையும் புதைப்பதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்து இருந்தது அந்த வழக்கினை பாட்டாளி மக்கள் கட்சி திரும்பி பெற்றதின் காரணமாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் கிடைத்தது என்பது அனைவரும் அறிந்தது
பாமக இல்லை என்றால் 2006 ல் வெறும் 96 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து திமுக ஆட்சி செய்திருக்க முடியாது. திமுக அரசு NLC நிர்வாகத்திற்கு அடிமையாக இருக்கிறது மேலும் என் எல் சி நிறுவனத்தால் காற்று மாசுபட்டுள்ளது தண்ணீர் மாசுபட்டுள்ளது நிலம் மாசுபட்டுள்ளது தமிழ்நாட்டைச் சார்ந்தவர் யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லை அமைச்சர் உறவினர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டு பெருமளவில் ஊழல் நடந்து வருகின்றது

சட்டரீதியாக அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடைபெறும் இதில் என்எல்சி குறித்தும் முந்திரி விவசாயிகள் மற்றும் தொழிற்சாலைகள் குறித்தும் சாயப்பட்டறைகளின் கழிவு குறித்தும் கடலூர் சிட்கோ தொழிலாளர்கள் குறித்தும் பொதுக்கூட்டம் வாயிலாக மக்களிடத்தில் கொண்டு செல்வோம் என்று அன்புமணி தெரிவித்தார்.

இதில் வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *