உலக அளவில் இந்தியா வல்லரசாக ஆவதற்கு பெண் தொழில் முனைவோர்களின் பங்களிப்பு அவசியம்
பள்ளி பருவத்தில் இருந்தே பெண்களின் தொழில் முனைவு திறன்களை கண்டறிந்து ஊக்கப்படுத்த பெற்றோர்கள் முன்வர வேண்டும்
ஆற்றல்மிக்க, எதிர்கால தொழில் நுட்ப சவால்களை எதிர்கொள்ளும் விதமாக கோவையில் துவங்கப்பட்ட புதிய மேக்கர்ஸ் ஹப் ஸ்ட்ரீம் மையத்தை துவக்கி வைத்த இந்திய தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு குழு உறுப்பினர் ரமணன் ராமநாதன் கோவையில் தகவல்
பள்ளி கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது ஆற்றல் திறனை வளர்த்தி கொள்ளும் விதமாக அனுபவ கற்றலை வழங்கும் வகையில் மேக்கர்ஸ் ஹப் எனும் நவீன கற்றல் ஆய்வகம் கோவையில் துவங்கப்பட்டது..
மேலை நாடுகளுக்கு இணையாக மாணவர்களுக்கு அனுபவ கற்றல் திறனை வழங்கும் வகையில் துவங்கப்பட்ட இந்த ஆய்வக மையத்தில்,அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகியவற்றுடன் இணைத்து ஆராய்ச்சி திறன்களை அதிகரிக்கும் விதமாக பல்வேறு தொழில் நுட்ப மாடல்களை மாதிரிகளாக வைத்து அனுபவ கற்றலை வழங்க உள்ளனர்..
முன்னதாக இதற்கான துவக்க விழாவில், இந்திய தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு குழு உறுப்பினர் ரமணன் ராமநாதன்,பினாகா இன்னோவேஷன் நிறுவனத்தின் நிறுவனருமான பெண் தொழில் முனைவோருமான ஸ்ரீப்ரியா கவுசிக்,மேக்கர்ஸ் ஹப் மையத்தின் நிறுவனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..
தற்போது சவாலான தொழில் நுட்ப உலகில், கற்றலுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையில் இது போன்ற மையங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், 5 வயது முதலான பள்ளி மாணவர்கள் துவங்கி கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கும் அனுபவக் கற்றலை வழங்கும் நவீன ஸ்ட்ரீம் கல்வி ஆய்வகத்தில்,3D அச்சுப்பொறிகள், AR/VR, ரோபாட்டிக்ஸ் கருவிகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் போன்ற பல்வேறு மாதிரிகளை மாணவர்கள் அனுபவ பூர்வமாக கற்று கொள்வதோடு, பள்ளி கல்லூரிகளில் தனித்தனியாகக் கற்பிக்கப்படும் பாடமுறைகளை, ஒன்றிணைத்து உண்மையான தொழில் நுட்பம் எவ்வாறு இணைகிறது என்பதை அனுபவ ரீதியாக மாணவர்கள் இந்த மையத்தில் கற்று கொள்ளலாம் என தெரிவித்தனர்..
குறிப்பாக இந்தியா போன்ற உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதிக பெண்களும் தொழில் முனைவோர்களாக மாற வேண்டியது அவசியம் எனவும்,இதற்கு பள்ளி பருவத்தில் இருந்தே பெண்களின் தொழில் முனைவு திறன்களை கண்டறிந்து அவற்றை ஊக்கப்படுத்துவது அவசியம் என தெரிவித்தனர்…