கரூர் செய்தியாளர் மரியான் பாபு
புஷ்பாஞ்சலி நடனத்தில் உலக சாதனை லிங்கா சாதனை
கரூர் மாவட்டத்தில் ஆடவல்லான் இசைத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் உலக பரத மாநாடு 2025 நிகழ்ச்சி கரூரை அடுத்துள்ள வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இச்சாதனை நிகழ்ச்சியில் கரூர் ஸ்ரீ ருத்ர நடனாலயம் நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் புஷ்பாஞ்சலி நடனமாடி உலக சாதனை புத்தகம் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.
இந்நிகழ்வினை கொங்கு மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்
k.பாலு குருசுவாமி தலைமையேற்று துவக்கி வைத்தார் மேலும் சாதனை பெற்ற மாணவிகளுக்கு பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.
இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் சுரேஷ், துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக, ஸ்ரீ ருத்ர நடனாலயத்தின் குரு. துஜான் அண்ணாதுரை நன்றியுரை வழங்கி நிகழ்ச்சி நிறைவுபெற்றது.