கடலூர் மாவட்டத்தில் ஆட்சித்தலைவர் கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சியினை துவக்கிவைத்தார்

தேசிய கைவினைப் பொருட்கள் வார விழாவினை முன்னிட்டு கடலூர். திருப்பாப்புலியூரில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,

கைவினைபொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ள, பூம்புகார் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படும், தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் 1973ஆம் ஆண்டு துவக்கப்பட்டடது. இதன் மூலம் தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு, புதுடெல்லி, கொல்கத்தா உட்பட 13 விற்பனை நிலையங்களை நடத்தி வருவதோடு, கூடுதல் சந்தை வாய்ப்பாக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இது தவிர தமிழகத்தில் சொந்தமாக ஏழு உற்பத்தி நிலையங்களை நடத்தி வருகிறது.

14 கைவினையர்களின் நலனுக்காக கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் அவர்கள் தேசிய கைவினைப்பொருட்கள் வாரமாக டிசம்பர் 8 முதல் வரையிலான கொண்டாட அறிவுறுத்தியதற்கிணங்க. “தேசிய கைவினைப்பொருட்கள் வாரம்” என்ற பெயரில் சிறப்பு கைவினை பொருட்கள், கைத்திறன் அறைகலங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை செய்யப்படுகிறது.

பொம்மைகள். இக்கண்காட்சியில் பஞ்சலோக சிலைகள், மரச்சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சை கலைத்தத்ட்டுகள், தஞ்சாவூர் ஓவிங்கள். களிமண். கல் மற்றும் காகிதக்கூழ் மா வேலைப்பாட்டிலான பரிசுப் பொருட்கள். அகர்பத்திகள். இக்கண்காட்சிக்கென சிறப்பாக தருவிக்கப்பட்டுள்ளன.மேலும் கைவினைஞர்கள் கொண்டு ஒரு நாள் செய்முறை விளக்ககாட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சியினை துவக்கிவைத்தார்

தேசிய கைவினைப் பொருட்கள் வார விழாவினை முன்னிட்டு கடலூர். திருப்பாப்புலியூரில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், கைவினைபொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ள, பூம்புகார் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படும், தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள்0 வளர்ச்சிக் கழகம் 1973ஆம் ஆண்டு துவக்கப்பட்டடது. இதன் மூலம் தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.


கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு, புதுடெல்லி, கொல்கத்தா உட்பட 13 விற்பனை நிலையங்களை நடத்தி வருவதோடு, கூடுதல் சந்தை வாய்ப்பாக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இது தவிர தமிழகத்தில் சொந்தமாக ஏழு உற்பத்தி நிலையங்களை நடத்தி வருகிறது.

14 கைவினையர்களின் நலனுக்காக கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் அவர்கள் தேசிய கைவினைப்பொருட்கள் வாரமாக டிசம்பர் 8 முதல் வரையிலான கொண்டாட அறிவுறுத்தியதற்கிணங்க. “தேசிய கைவினைப்பொருட்கள் வாரம்” என்ற பெயரில் சிறப்பு கைவினை பொருட்கள், கைத்திறன் அறைகலங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை செய்யப்படுகிறது.

பொம்மைகள். இக்கண்காட்சியில் பஞ்சலோக சிலைகள், மரச்சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சை கலைத்தத்ட்டுகள்,தஞ்சாவூர் ஓவிங்கள். களிமண்.கல் மற்றும் காகிதக்கூழ் மா வேலைப்பாட்டிலான பரிசுப் பொருட்கள். அகர்பத்திகள். இக்கண்காட்சிக்கென சிறப்பாக தருவிக்கப்பட்டுள்ளன.மேலும் கைவினைஞர்கள் கொண்டு ஒரு நாள் செய்முறை விளக்ககாட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்கு 10% சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணம் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் இக்கண்காட்சிப் பற்றிய தகவல்களை 04142-223099/9626237879 ஆகியp எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும். ஊக்குவித்திடவும் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பரிசுப்பொருட்கள்,கலை சிற்பங்கள் போன்றவைக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்

கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்ll கைவினைப் பொருட்கள் சேவை மையம் புதுச்சேரி சந்துரு. பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் கார்த்திக், கைவினைக் கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *