கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் புதயதாக கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இன்று அதிகாலை முதல் நாடி சந்தானம், இரண்டாம் கால யாக பூஜை, ஸ்பர்சாஹூதி பூஜை, பூர்ணாஹூதி பூஜை, தீபாராதனை, யாத்ராதானம், கிரகப்ரீதி, கடம்பறப்பாடு ஆகிய தீபாரதனைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு, கோபுர விமானம், ஶ்ரீ மகாசக்தி மாரியம்மன் தெய்வத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. புளியம்பட்டி, மைலம்பட்டி, திப்பனூர், இந்திராபுரி, அங்கம்பட்டி, போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து 1000த்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துக்கொண்டு கடவுளின் ஆசியை பெற்றனர். பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
போச்சம்பள்ளி காவல் துறையினர் விழாவிற்கு பாதுகாப்பு அளித்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் மூப்பர் ரமேஷ், காசிநாதன் மற்றும் ஆசிரியர் அன்பு உள்ளிட்ட கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.