கும்பகோணம், சீனிவாசநல்லூர் அண்ணாநகர் நலச்சங்க கூட்டம், நாகராஜ் நகரில் நடைபெற்றது. தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் தண்டபாணி தொடக்கவுரை ஆற்றினார். சங்க உறுப்பினரும் எழுத்தாளருமான முனைவர்.ஆதலையூர் சூரியகுமார் சிறப்புரை ஆற்றினார்.

உறுப்பினர்கள் எஸ்ஐஆர்படிவம் வழங்கியது பற்றியும், தகுதி வாய்ந்த புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டியது பற்றியும் விழிப்புணர்வு விவாதம் நடந்தது. குடியிருப்பு வாசிகளுக்கான தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொருளாளர் பாஸ்கர் நன்றியுரை கூறினார்.