தமிழகக் கடலோர பகுதிகளில் கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடற்காவல் நிலையங்கள் தோறும் சிறப்புப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை காவல் நிலைய சரகம் மீனவர் குப்பம். கிழக்கு புதுநகர், சிவகாமிபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் காவல் ஆய்வாளர் ஜான்சி ராணி தலைமையில் சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் நுண்ணறிவு தலைமை காவலர் மதியழகன், தலைமை காவலர், திருத்தணிகை வேலன் ,முதல்நிலை காவலர் சுரேந்தர் சிங் ,ஆகியோருடன் ரோந்து செய்து கண்காணித்து வரும்போது கீழக்கரை கடற்கரை சாலை மாதா கோவில் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த காதர் பாட்ஷா வயது 27, S / O காதர் மைதீன் ரகுமான், பாண்டுரங்கன் தெரு, மேலூர்,தூத்துக்குடி, ஹரிக் குமார் வயது 25, S / O, பெரியசாமி, அருப்புக்கோட்டை ரோடு, சாயல்குடி ஆகியவரை விசாரிக்கும் போது சந்தேகத்துக்கு இடமான வகையில் பதில் கூறியதால் அவர்கள் கொண்டு வந்திருந்த பையை சோதனை செய்தனர் அதற்குள் யானையின் தந்தத்தின் முன் பகுதி இரண்டு இருந்ததை கைப்பற்றினர் எடை போட்டு பார்த்ததில் 3.900 கிலோ எடை இருந்து பின்பு அதன் மதிப்பு சுமார் 1 கோடி என தெரியவருகிறது. பின்பு இது சம்மந்தமாக விசாரணை செய்ததில் இதில் தொடர்புடைய வாலிநோக்கம், காவா குளத்தை சேர்ந்த குழந்தை ராஜ் மகன் ஸ்ரீராம், வயது 26 என்பவரை பிடித்து விசாரணைக்கு பின்னர் மேல் நடவடிக்கைக்காக இராமநாதபுரம் வனசரகம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *