பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 66வது குடியரசு தின விழா குழு போட்டிகள் கூடைப்பந்து பெண்கள் பிரிவு திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் கடந்த டிச.3 முதல் டிச.5 வரை நடைபெற்றது.இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டன.
கூடைப் பந்து பயிற்சியாளர் மாரியப்பன் மற்றும் காயத்ரி ஆகியோர் தலைமையில் சென்ற எஸ்விஜிவி பள்ளி அணி 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் எஸ்விஜிவி பள்ளி அணி இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது.இதில் மாணவி சுவாதிகா சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும்,பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாணவிகளுக்கு பள்ளி சார்பில் சால்வை அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி,நிர்வாக அறங்காவலர் லோகு முருகன்,முதல்வர் சசிகலா,செயலாளர் ராஜேந்திரன்,பொருளாளர் ரத்தினசாமி,அறங்காவலர்கள் வேலுச்சாமி,ராஜேந்திரன்,தாரகேஸ்வரி,நிர்வாக அலுவலர் சிவ சதீஷ்குமார், கூடைப்பந்து பயிற்சியாளர் மாரியப்பன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்.,ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், சக மாணவ மாணவிகள் பாராட்டினார்கள்.