வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய ஒரு நாள் வேளாண் பயிற்சி முகாம்

செய்தியாளர் ஜி.பி.மார்க்ஸ்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் இராட்டிணமங்கலம் கிராமத்தில் விஐடி வேளாண்துறை மாணவர்கள் மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து ” நெற்பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை “ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் முக்கிய பயிற்சியாளராக விஐடி உழவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பிரதீஷ் குமார் அவர்கள் பங்கேற்று விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் பங்கேற்ற விவசாய பெருமக்களுக்கு ரசாயனம் தவிர இயற்கை உர மேலாண்மை முறைகள் குறித்த விழிபுணர்வும் அறிவியல் சார்ந்த பயிர் சாகுபடி முறைகளும் விளக்கப்பட்டன.

இதில் வேளாண்துறை மாணவியர்கள் பார்கவி, மோனிகா, கேதரீன், பாரதி மித்ரா , அணு ஸ்ரீ கோபி ஆகியோர் விவசாயிகளக்கு திரவ உயிர் உரங்களின் மூலம் விதை நேர்த்தி மற்றும் நாற்று நனைத்தல் போன்ற செயல் முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

இதில் மேலும் விஐடி வேளாண் விரிவாக்க துறை உதவி பேராசிரியர் முனைவர் மோகன்ராஜ், மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் கிராம மேம்பாட்டு அலுவலர்கள் தர்மேன்தரன், விக்னேஷ், ராஜ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *