சென்னை மணலியில் விபத்துல்லா தீபாவளி குறித்து தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செய்முறை விளக்கம்

மணலி தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பேரணி

மணலி சின்னசேக்காடு செயின் தாமஸ் பள்ளி வளாகத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செய்முறை விளக்கம் அறிவுரை வழங்கப்பட்டது

வரவிருக்கும் தீபாவளி முன்னிட்டு மணலி தீ அனைப்பு நிலையம் சார்பில் விபத்து இல்லா தீபாவளியை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பேரணி பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தீ அனைப்பு அலுவளர் தென்னரசு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார் உதவி மாவட்ட அலுவலர் பொன்மாரியப்பன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பள்ளி தாளாளர் ராஜன் மேத்துயுஸ்.பள்ளி தலைமை ஆசிரியர் தீபா மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இந்த பேரணியானது பள்ளி மாணவ மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேண்ட் வாத்தியங்கள் முழங்க சின்ன சேக்காடு மணலி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தீயணைப்பு வீரர் சௌந்தரபாண்டியன் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தீபாவளின் போது பள்ளி மாணவ மாணவிகள் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக பட்டாசு எப்படி வெடிப்பது பட்டாசு வெடிக்கும் போது என்ன மாதிரி உடைகளை அணிவது வாலியில் தண்ணீர் வைத்து பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது தீ விபத்து ஏற்பட்டால் தீக்காயம் பட்டவரை எப்படி முதலுதவி அளிப்பது என்று அறிவுரை வழங்கி பட்டாசு வெடிக்கும் போது நீண்ட ஊதுபத்தியை பயன்படுத்தி பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்து செய்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது

இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இந்த செய்முறை விளக்கத்தை பார்த்து பயனடைந்தனர் தீயணைப்பு இவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *