சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

ம‌ற்று‌ம் வரதட்சணை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி:-

தென்காசி மாவட்ட சமூகநலத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ம‌ற்று‌ம் வரதட்சணை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் தலைமை ஏற்று கொடி அசைத்து விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்.

இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது

பேரணியினை தொடர்ந்து அனைவராலும் பாலின வன்முறை தவிர்த்தலுக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த பேரணியில் வரதட்சணையை ஒழிப்போம்,
பாலின வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம், பெண்களை இழிவு படுத்தும் செயல்களை புறக்கணிப்போம், பெண்களுக்கான உதவி எண் 181 என்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு கோஷமிட்டபடி சென்றனர்.

இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன்
சகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, ஐ.யு.சி ஏ. டபுல்யு காவல் உதவி ஆய்வாளர் ரத்னபால் சாந்தி, பெண்கள் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ்,
சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள்,ஒன் ஸ்டாப் சென்டர் பணியாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் ம‌ற்று‌ம் அங்கன்வாடி பணியாளர்கள் என 100 க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *