திருவாரூரில்
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்கு கூட்டம்

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்கு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட உடனிருந்தனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில் மிகை முன்னோடி மாநிலமாக மாற்றும் பொருட்டு உலக முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் துவங்க ஈர்க்கும் நோக்கத்துடன் தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை – 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஆணையின்படி, நிகழ்வின் முன்னோட்டமாக இன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அதற்கான காரணங்களாக தொழில் சார்ந்த வழிகாட்டல் மையம் சென்னையில் உள்ளது. ஒரு தொழில் தொடங்குவதற்கு நிறுவனத்தினர்கள் தொடர்புகொண்டால் அதற்கான வழிகாட்டல், வழிமுறை அனைத்தும் வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, அதிகளவில் தொழிற்சார்ந்த படிப்புகளை படித்த இளைஞர்கள் நம் மாநிலத்தில் அதிகளவில் உள்ளதாலும், பெரிய நிறுவனங்களின் அடிப்படைக்கு தேவையான குறு, சிறு நிறுவனங்கள் நமது நாட்டில் உள்ள. காரணமே ஆகும்.

அதிகளவில் இந்திய அளவிலான திட்டங்கள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் என் பல்வேறு திட்டங்கள் தொழில் முனைவோர்களுக்காக செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி, திருவாரூர் மாவட்டத்தில் 34 சதவீதம் பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். பட்டியலின மக்கள்; பெருமளவில் பயனடையும் வகையில் தமிழக அரசால் அண்ணல் அம்பேத்கர் திட்டம் சமீபகாலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 33 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் உள்ளது. அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மானியத்துடன்கூடிய கடன் வழங்கப்படுகிறது.

மேலும், இங்கு வந்துள்ள அனைத்து துறையினர் தொழில் முதலீட்டு வழிமுறைகள் குறித்து விளக்கவுரை வழங்கவுள்ளனர். தமிழ்நாட்டின் பொருளாதார கணக்கெடுப்புப்படி 13 சதவீதம் வேளாண் சார்ந்த பணிகளும், 33 சதவீதமும் உற்பத்தி சார்ந்த பணிகளும், 54 சதவீதமும் சேவை சார்ந்த பணிகளும் உள்ளது. ஆனால் மக்கள் தொகை பங்கீடு ஒவ்வொரு பணிகளிலும் சரிவர இல்லை. இந்த நிலை மாற்ற, வேளாண் சார்ந்த பொருட்களை மதிப்புக்கூட்டுப்பொருளாக கொண்டு செல்லும் குறு, சிறு நிறுவனங்களில் பங்கேற்கவுள்ள இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் குறு, சிறு தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு மிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


நிகழ்வில், உதவி இயக்குநர் மாவட்ட தொழில் மையம் .டி.செல்வம் மாவட்ட சுற்றுபுறசூழல் பொறியாளர் தமிழ்ஒளி மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் எஸ்.ரவிச்சந்திரன் நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ், திட்டக்குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *