தென்காசி தெற்கு மாவட்டம் முழுவதும் திமுக இளைஞரணி செயலாளர் ,இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட உதவிகள் வழங்கும் விழா கடையநல்லூர் நகர திமுக சார்பில் மணிக்கூண்டு அருகே நகர அவை தலைவர் முருகையா தலைமையில் நடைபெற்றது.

நகரச் செயலாளர் அப்பாஸ் அனைவரையும் வரவேற்றார் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை பட்டாசு வெடித்து அனைவருக்கும் லட்டு வழங்கி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்

அதனைத் தொடர்ந்து 46 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு உதவி பெறும் தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் முகைதீன் கனி தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி நீட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்

அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் 460 பேர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து இட்டனர் இதில் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபிப்ரஹ்மான் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய செயலாளர் சுரேஷ் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிக்கந்தர் உதவி தலைமை ஆசிரியர் ஜபருல்லா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *