செடி முருங்கை சாகுபடி செய்து ஆண்டுதோறும் ஏக்கருக்கு 20 டன் மகசூல் பெறலாம் வேளாண் துறையினர்விளக்கம்.

செடி முருங்கை சாகுபடி செய்து ஆண்டுதோறும் ஏக்கருக்கு 20 டன் மகசூல் பெறலாம் என்று வேளாண் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்து குறிப்பில் ஒரு இருப்பதாவது:-
முருங்கை எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது எல்லா பருவ காலங்களிலும் பலன் தரக்கூடியது. இன்று இதில் பலவகை மதிப்பு கூட்டு பொருட்களை உருவாக்கி உலகம் முழுவதும் சந்தைப்படுத்தி வருகின்றனர்

முருங்கை விவசாயிகள். முருங்கையில் நாட்டு முருங்கை, செடி முருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் நாட்டு முருங்கையில் மருத்துவ குணமும், சுவையும் அதிகமாக இருக்கும்.

செடி முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள். செடி முருங்கை விதை மூலமும், நாட்டு முருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.

முருங்கை விதைப்பதற்கு முன் மூடிய குழிகளில் நீர் ஊற்ற வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் மீண்டும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். முருங்கையில் நல்ல விளைச்சல் பெற செடி ஒன்றுக்கு 45 கிராம் தழைச்சத்து,16 கிராம் மணி சக்தி, 30 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை விதைத்த மூணாவது மாதத்தில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

மேலும் ஆறாவது மாதத்தில் தழைசத்து மட்டும் ஒரு செடிக்கு 45 கிராம் என்ற அளவில் இட வேண்டும். விதைத்து இரண்டு மாதங்கள் வரை நிலத்தை களையின்றி பராமரிக்க வேண்டும். செடிகள் மூன்றடி உயரம் வளர்ந்த பிறகு மாதம் ஒருமுறை அல்லது தேவைப்படும்போது களையெடுக்க வேண்டும். செடிகள் சுமார் ஒரு மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் நுனியை கிள்ளிவிட வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் பக்க கிளைகள் அதிகமாக தோன்றும். ஒரு வருடம் கழித்து காய்ப்பு முடிந்த பிறகு செடிகளை தரை மட்டத்திலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் வெட்டி விட வேண்டும்.

இதனால் புதிய குருத்துகள் வளர்ந்து மீண்டும் நாலு முதல் ஐந்து மாதங்களில் காய்க்க தொடங்கும். இதுபோல ஒவ்வொரு காய்புக்குப் பிறகும் செடியை வெட்டி விட்டு மூன்று ஆண்டுகள் வரை மறுதாம்புப் பயிராக பராமரிக்கலாம். ஒவ்வொரு முறை கவாத்து செய்த பிறகு பரிந்துரை செய்யப்பட்டுள்ள தழை, மணி, சாம்பல் சத்து உரங்களோடு மக்கிய தொழு உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

இதை யடுத்து ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும். நோய் நிர்வாகம் செய்து செடிகளை பாதுகாத்த பின், ஓராண்டில் ஒரு மாதத்தில் இருந்து சுமார் 220 காய்கள் வரை அறுவடை செய்யலாம். ஆண்டு ஒன்றில் ஒரு ஏக்கருக்கு 20- 22 டன் வரை காய்கள் கிடைக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *