சென்னை அண்ணாநகரில் உள்ள குளோபல் யோகா அகடாமி சார்பில் டிசம்பர் 11ம் தேதி உலக யோகா தினம் அறிவித்து உலளவில் யோகாவை கொண்டாடுவற்கு காரணமாக உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கும் வகையில் யோகா கற்றுவரும் மாணவர்கள் ஒரு லட்சம் தபால் தலைகள் அனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதன்படி கடந்த டிசம்பர் 10ம் தேதி முதல் ஒரு வாரம் காலமாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தபால் அனுப்பி வருகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள 15 ஆயிரம் யோகா பள்ளிகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தொடர்ச்சியாக கடிதம் எழுதி அனுப்பி உள்ளனர்
இந்த நிலையில் யோகா மாணவர்கள், பயிற்சியாளார்கள், மாணவர்களின் பெற்றோர் என ஒரு லட்சம் தபால் கடிதங்களை பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அஞ்சலகம் மூலம் அனுப்பியதை குளோபல் புக் ஆப் யோகா ரெக்கார்ட்ஸ் புதிய உலக சாதனையாக அங்கரித்தது.
இதனையடுத்து குளோபல் யோகா பள்ளி நிறுவனர் கணேஷுக்கு உலகசாதனைகான சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.