கோவையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பாக வரும் பிப்ரவரி 13 மற்றும் 14 ந்தேதி வீட்டுக் கடன் கண்காட்சி-கண்காட்சி அறிமுக விழாவில் முன்னணி கட்டுமானம் மற்றும் வீடு விற்பனை நிறுவனத்தினர் மற்றும் கார் விற்பனை நிறுவனத்தினர் பங்கேற்பு
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பாக வரும் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் வங்கி வீட்டுக் கடன் கண்காட்சி நடைபெற உள்ளது..
வி.ஜி.ஆட்ஸ் மற்றும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் இணைந்து கோவை கொடிசியா அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சி வீடு வாங்குவோர், முதலீடு செய்ய விரும்புபவர்கள் மற்றும் புதிய கார்கள் வாங்குவோர் என அனைவரும் ஒரு கூரையின் கீழ் பயன்பெறும் வகையில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலை தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது…
இதில் முன்னனி கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கார் டீலர் நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்..
இதில் பாரத ஸ்டேட் வங்கியின் டி.ஜி.எம்.அருண் மற்றும் மண்டல மேலாளர்கள் ரெங்கநாதன்,காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்..
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள வீட்டு கடன் கண்காட்சியில்,
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் மற்றும் கார் கடன் அளிக்கப்படுகிறது
. மேலும் உடனடி கடன் ஒப்புதல் மற்றும் பரிசீலனைக் கட்டணத்தில் தள்ளுபடி உள்ளிட்ட பயன்களையும் பொதுமக்கள் பெற முடியும். மேலும் இங்கு புதிய வீடு வாங்க மற்றும் கட்ட, வீட்டில் மாறுதல்கள் செய்ய மற்றும் அடமானக் கடன் ஆகியவற்றை குறைந்த வட்டி விகிதத்தில் விரைவாக பொதுமக்கள் பெற முடியும் என தெரிவித்தனர்..
100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு புராஜெக்டுகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. அனைவரின் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் 10 லட்சம் முதல் 5 கோடி வரையிலான சொத்துக்களை இங்கு வாங்க முடியும் என கூறினர்…
மேலும்,பல்வேறு முன்னணி கார் டீலர்களை உள்ளடக்கிய கார் மேளா கண்காட்சியும் இங்கு நடைபெறுகிறது. நவீன மாடல் கார்கள், மின்சார கார்கள் உள்ளிட்ட அனைத்து கார்களையும் சிறப்பு சலுகைகளுடன் பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.
இக்கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள் மற்றும் வருகை தரும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு சிறப்பான அனுபவத்தை அளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் வி.ஜி.விளம்பரம் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் செய்து வருவது குறிப்பிடதக்கது..