தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் ஜெகன் பேசுகையில் கிழக்கு மண்டலத்தில் மட்டும் 810 மனுக்கள் பெறப்பட்டு 791 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
19 மனுக்கள் மட்டும் பெண்டிங் உள்ளது அது சாலை வசதி கான் வசதி உள்ளிட்ட மனுக்கள் ஆகும். ஜனவரி 10ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது அதன் பிறகு சாலைகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். கிழக்கு மண்டலத்தில் வார்டு 21 முதல் 28 வரை கால்கள் மூடி போடாமல் உள்ளது புதியதாக கட்டப்படுகின்ற காண்கள் சுகாதாரமான முறையில் மூடி போட்டு காண அமைக்கப்படுகிறது எஸ் எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதியில் தற்போது அந்த பணியில் நடைபெற்று வருகிறது.
துறைமுகத்தில் உள்ள பீச் மாநகராட்சியும் துறைமுகமும் சேர்ந்து பணிகள் செய்து வருகிறது. பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல பீச் ரோட்டில் நடைப்பயிற்சி புதியதாக அமைக்கப்பட்டுள்ளது அதில் நாலு கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. பீச் ரோட்டில் படகு முகாமில் புதியதாக படகு விடுவதற்கான பணிகள் நடைபெறுகிறது அது பொங்கலுக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும். தெப்பக்குளம் எல்லா அரசியல் கட்சிகளும் ஆய்வு செய்து பார்த்தது. அங்குள்ள ஒரு கல்வெட்டைப் பார்த்து 147 வருடங்களுக்கு முன்பு உள்ளது. தெப்பக்குளத்தில் உள்ள நீரை அப்பப்பம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது 1997 ஆம் ஆண்டு சில பராமரிப்பு செய்யப்பட்டது.
2019 இல் இருந்து தூத்துக்குடி மாநகரில் நல்ல மழை பெய்து வருகிறது. நிரந்தரமாக அதனை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் ஆணையரும் சேர்ந்து ஆய்வு செய்தோம். நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில் முன்பு அப்படியே பழமை மாறாமல் சீர் அமைக்கப்படும். புதிய மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பழைய மாநகராட்சி அலுவலகம் வரை ஒரு பக்கம் தான் வாகனங்கள் நிறுத்த வேண்டும் என்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக தான் நடைபாதை அமைக்கப்படுகிறது சாலை ஓர வியாபாரிகள் ஒன்பதாயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்கில் ஆரம்பிக்கப்பட்டு மார்க்கெட் வரை உள்ள வி.இ.ரோட்டில் சாலை ஓர நடை பாதையில் கடைகள் அமைப்பதற்கு அனுமதி கிடையாது அதுபோல வேண்டும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் அனுமதி கிடையாது
அது பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். மாநகரில் 60 அடி 40 அடி 20 அடி சாலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. மக்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் சர்வ சாதாரணமாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 20 அடி சாலை உள்ளது அதில் 10 கார்கள் நீங்கள் நிறுத்தி விடுகிறீர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள் ஆகையால் வாகனங்களை பார்க்கிங்கில் கொண்டு நிறுத்த வேண்டும் ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தக்கூடாது. பொதுமக்கள் தங்களுடைய புகார்களை எந்த நேரம் ஆனாலும் மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம். நாய்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாடுகள் சாலைகளில் திரிவதை கண்டறியப்பட்டு பிடிக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது அதில் வரப்படுகின்ற கழிவு நீரை தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.