நாகர்கோவில் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாற்று நடும் போராட்டத்தில் கலந்து கொண்டு நீதிமன்ற வழக்குகளை சந்தித்த தோழர்களுக்கு ஆதரவாக வாதாடி விடுதலை பெற்று தந்த
வழக்கறிஞருக்கு பாராட்டு வழங்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கட்சியின் 100-வது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ஆரல்வாய்மொழி பாரதியார் நினைவு கலையரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆரல்வாய்மொழி நகரச் செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் குருசாமி, சுந்தரம், முன்னாள் செயலாளர் சுப்பிரமணியம், தங்கவேல் முருகன் மற்றும் நாகர்கோவில் மாநகரச் செயலாளர் கே. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோவாளை தாலூகா ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார். இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலாளரும், கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினருமான கண்ணகி கலந்துகொண்டு நூற்றாண்டு நிறைவு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, பொதுமக்களின் நலனுக்காக சாலைகளைச் சீரமைக்கக் கோரி நடைபெற்ற நாற்று நடும் போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளில், நீதிமன்றத்தில் திறம்பட வாதாடி அவர்களை விடுதலையடையச் செய்த குழித்துறை வழக்கறிஞர் சந்தோஷ் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை அளிக்கப்பட்டது.
மேலும், அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கும் பொன்னாடை போர்த்திமரியாதை அளிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா, பேராசிரியர் சுந்தரம், மாவட்ட துணைத் தலைவர்/செயலாளர் எஸ். அனில் குமார், மாவட்ட பொருளாளர் பி. தாமரைசிங், நகரப் பொருளாளர் வாசு, துணைச் செயலாளர் புஷ்பராஜ், கட்சிப் பாடகர் நெல்சன் , தக்கலை ராஜு, சத்தியன் ,இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்டச் செயலாளர் செல்வராணி ,
உட்பட பலர் கலந்துகொண்டனர். எழுச்சியான இசை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த விழாவின் நிறைவில், மாவட்ட துணைச் செயலாளர் ஜி. சுரேஷ் மேசியதாஸ் நன்றி கூறினார்.