லாரல் பள்ளிக் குழுமங்கள் சார்பாக நடைபெற்ற 31 வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா

சிறப்பு விருந்தினர்களாகப் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா மற்றும் பாஸ்டர் ஜான்சன் சத்யநாதன் ஆகியோர் பங்கேற்பு கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாரல் கல்விக் குழுமங்களின் லாரல் மெட்ரிக் பள்ளி மற்றும் பென்கிலென் பப்ளிக் பள்ளி சார்பாக 31 வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது..

பள்ளியின் தாளாளர் ஃபிராங்க் டேவிட் தலைமையில் , இணை தாளாளர் அபிஷேக் பால் ஜாக்சன், முன்னிலையில் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கௌரவ விருந்தினராக டிரினிட்டி மினிஸ்ட்ரீஸ் பாஸ்டர் ஜான்சன் சத்யநாதன் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்..

நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன..

இதில் கலந்து கொண்ட மாணவர்கள் உற்சாகமாகப் பாடல்கள் பாடியும், நடனங்கள் ஆடியும் தங்கள்,மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு குறுநாடகங்கள் மூலமாக கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையை அனைவருக்கும் அறிவித்தனர்.

தொடர்ந்து பள்ளியில் கடந்த ஆண்டில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

லாரல் மெட்ரிக் பள்ளியின் நிர்வாகிகள் ஃபிராங்க் மற்றும் அபிஷேக் ஆகியோர் கூறுகையில், லாரல் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கற்பிப்பதோடு மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு போட்டிகள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர் நிகழ்ச்சியில் கிறிஸ்ஸி அபிஷேக் பால் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவ,மாணவிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *