கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் 16வது நாளாக வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டம்..
நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் பழையை நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து 16-வது நாளாக நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து தொடர்ந்து 16-வது நாளாக கரூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தொடர் ஆர்ப்பாட்டத்தினால் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கீழமை நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், ஆன்லைனில் பதிவு செய்யும் முறைக்கு போதிய கட்டமைப்பு செய்துவிட்டு இதனை நடைமுறைபடுத்த வேண்டும், கட்டமைப்பு ஏற்படுத்தும் வரை பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து கரூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கரூர் நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தமிழகத்தில் மட்டுமே இந்த நடைமுறையை அமல்படுத்துவதாகவும் வடமாநிலங்களில் இது போன்ற நடைமுறை இல்லை என்றும் போதிய கணிணி ஊழியர்கள் இல்லை என்பதால் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபவதாக தெரிவித்து வழக்கறிஞர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தொடர்ந்து 16 வது நாளாக நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதால் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.ஆகையால் அரசு இது உடனே பரிசினை செய்து எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினர்