டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்த சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்தலுக்கான சிறப்பு முகாமானது எதிர்வரும் 20.12.2025(சனிக்கிழமை) மற்றும் 21.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் 04.11.2025 அன்று முதல் சிறப்பு தீவிரத்திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட, ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் எதிர் வரும் 20.12.2025 (சனிக்கிழமை) மற்றும் 21.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்தப்படுகிறது.
இந்தாண்டு தேர்தல் ஆண்டு என்பதால் பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்
வே. சரவணன்.இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.