சீர்காழி அருகே வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து 10 கிராமத்தைச் சேர்ந்த 200 பேர் சாலை மறியல் போராட்டம்.

வள்ளுவக்குடி – சீர்காழி பிரதான சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நீதிமன்ற உத்தரவுபடி இடமாற்றம் செய்வதை கண்டித்து வள்ளுவக்குடி, கொண்டல், அக்னி, நிம்மேலி, ஆதமங்கலம்,வடரங்கம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 200 பேர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் அரசு புறம்போக்கு நிலமாகும் இதன் பெயர் கறி களம் பெயர் மருவி கறி குளமாக வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ளதால் அதனை அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் குளத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும் அதனை இட மாற்ற செய்ய வேண்டுமென வழக்கு தொடர்ந்ததை அடுத்து நீதிமன்றம் ஆரம்ப சுகாதார நிலையத்தை இட மாற்றம் செய்ய உத்தரவிட்டது,

தற்பொழுது சுகாதார நிலையத்தில் உள்ள பொருட்களை இடமாற்றம் செய்வது அறிந்த கிராம மக்கள் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிராம மக்களுக்கு இடையூறு இன்றி அவசர காலத்தில் பயனுள்ளதாக இருப்பதால் அதனை இடமாற்றம் செய்யக்கூடாது எனக் கூறி வள்ளுவக்குடி – சீர்காழி பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,

தகவல் அறிந்து வந்த சீர்காழி வட்டாட்சியர் சுகாதார நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்வதை நிறுத்துவதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலில் இருந்து விலகிக் கொண்டனர்.

இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *