இயேசுகிறிஸ்து உலகில் அவதரித்த டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை தற்போதே அலங்கரிக்கத் துவங்கியுள்ளனர். இதற்காக தங்களது வீடுகளுக்கு வர்ணம் பூசி ஸ்டார்கள் மற்றும் குடில்களை மகிழ்ச்சியுடன் வடிவமைத்து வருகின்றனர்.
பொதுவாக டிசம்பர் மாதம் பிறந்தாலே கிறிஸ்துமஸ் பண்டிகை
களை கட்டத் துவங்கும் என்பதோடு கிறிஸ்தவ ஆலயங்களும், வர்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கப் படுவது வழக்கம்.
அந்த வகையில் மதுரை கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். மதுரையில் கிறிஸ்தவ ஆலயங்கள், மற்றும் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை, யேசு கிறிஸ்து பிறப்பு குறித்த குறு நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், அலங்கார விளக்குகள், குடில்கள், கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. அலங்கார விளக்குகள், தோரண விளக்குகள் விதவிதமான வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தவிர குடில் செட்டுகள் தற்போது புது மாடல்களில் வந்துள்ளன.
‘‘கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை
யொட்டி விதவிதமான ஸ்டார்கள், குடில்கள், சாண்டா கிளாஸ் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், சீரியல் லைட்டுகள், கேக்குகள் விற்பனை களைகட்டி உள்ளது.