கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா தோட்ட தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில் தோட்டத் தொழிலாளர்களின் நலன்கருதி கடந்த 24.01.2021 அன்று தொழிற்சங்கத்தினரும் தமிழ்நாடு தோட்ட அதிபர் சங்கம் ஆனைமலை தோட்ட அதிபர் சங்கம், நீலகிரி வயநாடு அதிபர் சங்கம் ஏற்படுத்திக்கொண்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் படி 01.07.2021 முதல் ரூ.395 ஐ ஏபிஏ உறுப்பினர் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் நிலையில் கொங்கு மண்டலம், அக்ரோஃபாம்,சஜிதா பிளாண்டேசன், சென்னியப்பா எஸ்டேட், மானாம் பள்ளி எஸ்டேட், அனலி,சிவா காபி, ஸ்ரீ ராம், பிளண்டிவேலி, சக்தி, அகதீஸ்வரா ஆகிய பத்து நிறுவனங்கள் ஒப்பந்தப்படி ஊதியம் வழங்காமல் ரூ.440 மட்டுமே வழங்கி வருவதாகவும் இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் இந்நிலையில் ஏபிஏ உறுப்பினர் தோட்டங்கள் 22.10.2025 ஒப்பந்தப்படி 01.07.2025 முதல் தினக்கூலி ரூ.475 வழங்கி வருவரும் நிலையில் குறிப்பிட்ட பத்து நிறுவனங்கள் தொழிற்சங்கத்தினருடன் எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படுத்தாமல் 01.09.2021 முதல் மற்ற தோட்ட நிறுவனங்கள் இதுவரை ஒரு கணவன் மனைவிக்கு வழங்கி வந்த சுமார் 16 ஆயிரத்து 440 ரூபாய் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் இதனால் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை மற்றும் பணம் பலன்களை 14 தினங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 20 ஆம் தேதி நிர்வாகத்தினரை கண்டித்து தொழிற்சங்கத்தினர்
ஒருங்கிணைந்த போராட்டம் நடைபெறும் என்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் இந்நிலையில் தொழிலாளர் துணை ஆணையர் சமரசம் 3 தொழிற்சங்கத்தினருக்கு கடிதம் அனுப்பி 18 ஆம் தேதி நாளை கோவையில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருப்பதால் தற்சமயம் அறிவிக்கப்பட்ட போராட்டத்தை ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மேலும் ஏடிபி, எல்பிஎப், ஐஎன்டியூசி, ஏஐடியூசி, எல்.எல்.எப்.விசிகே, எம்.எல்.எப், பிஜேபி உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கத்தினருடன் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் நடத்துவது பற்றி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது