மாதவரம் எம் ஆர் எச் ரோடு, தபால் பெட்டி அருகில் உள்ள சி.எஸ்.ஐ அருள் கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமனிந்து
முக்கிய வீதிகளில் பேரணியாக வந்த கிறிஸ்தவ பெருமக்கள்.

மாதவரம் சி.எஸ்.ஐ அருள் கிறிஸ்துவ ஆலயத்தின் சார்பில் ஆயர் ஈஸ்டர்ராஜ் தலைமையில் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது . வடவட்டார குருசேகர தலைவர் ஸ்டீபன் சாமுவேல் உட்பட ஆலய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் சிறப்பை சிறுவர்கள் ஆடல், பாடல்களுடன் நடனமாடி கலை நிகழ்ச்சிகளுடன் எடுத்துரைத்தனர்.
மேலும் இறை பக்தி பாடல்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்வு , தபால்பெட்டி பகுதியை சுற்றியுள்ள 10‌ க்கும் மேற்பட்ட தெருக்களில் கிறிஸ்துவ வேடமடைந்த சிறுவர் முதல் பெரியோர் வரை பக்தி பாடல்களை பாடியவாறு முக்கிய வீதிகளில் , ஆண்கள் பெண்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக அனைவரும் கவரும் விதத்தில் பேரணியாக சென்றனர். மாதவரம் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *