திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அன்ன செட்டி மடம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் குடியிருந்து வரும் நிலையில் அனைவரையும் காலி செய்ய வேண்டும் என்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து திருக்கோயில் நிர்வாகம் சார்பாக ஆக்கிரமைபுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து பல வருடங்களாக குடியிருந்து வரும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

மேலும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக கிரிவலம் பாதையில் வாகனங்கள் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக திருக்கோயிலை சுற்றி இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனால் வியாபாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன.

இதனையடுத்து
பழனி கோட்டாட்சியர் சரவணனிடம் அடிவாரம் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனுவை அளித்தனர்.

இந்நிகழ்வில்
கன்பத் ஹரிஹரமுத்து, கந்தவிலாஸ் பாஸ்கரன், வணிகர் சங்க செயலாளர் சுப்பிரமணி, கார்த்திகேயன், செந்தில்குமார், ஆனந்தகுமார் ,
வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார், கவுன்சிலர் தீனதயாளன், விமலா பாண்டியன், இந்து முன்னணி பாலன், ராஜா,முருகானந்தம், அதிமுக சரவணன், பாபு, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுவினை அளித்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *