புதுவை மடுகரையில் பல லட்சம் மதிப்புள்ள தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்!
வெட்டிய நபர் மீது நடவடிக்கை கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

புதுவை மடுகரையில் ராமமூர்த்தி அரசு உயர்நிலைப்பள்ளி பின்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் தோட்டம் உள்ளது. இதில் மா கொய்யா புன்னை மற்றும் தேக்க மரங்கள் பெரிய அளவில் இருந்தது. இந்த இடத்தை சரி செய்து மகளிர் சுய உதவி குழுக்கள் தோட்ட பயிர்கள் செய்து காய்கறி விற்பனைக்கு முற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தோட்டத்தில் இருந்து நச்சு பாம்புகள் அரசு பள்ளிக்குள் படையெடுப்பதால் மாணவர்களுடைய உயிருக்கு ஆபத்தான நிலை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதற்காகவும் இந்த தோட்டத்தை அழிப்பதற்கு வட்டார வளர்ச்சித்துறையின் புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முன் வந்தது.

ஆகவே தோட்டத்தை அழித்து அதில் உள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் வட்டார வளர்ச்சி துறையின் புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தான், சுத்தப்படுத்துபவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் செலவு செய்ய வேண்டும், மாறாக அதில் இருக்கும் அரசுக்கு சொந்தமான மரங்கள் மற்றும் காய்கனிகளையும் மரம் வெட்டுவோர் எடுத்துச் செல்லலாம் என்ற அடிப்படையில்தான் ஃபார்மாலிட்டிக்காக குறைந்த விலையில் 25 ஆயிரம் ரூபாய் ரெசிப்ட் போட்டு பணம் பெற்றுக் கொண்டது. பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு செயலாளர் விஜய நாராயணி பொருளாளர் அபிராமி ஆகியோர் மேற்படி தொகையை ரெசிப்ட் போட்டு பெற்றுக் கொண்டனர்.

மேற்படி தொகையை மடுகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவக்குமார் ரூபாய் 25,000 பணம் செலுத்தியுள்ளார். இதனை அடுத்து சிவா என்கின்ற சிவக்குமார் மேற்படி தோட்டத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்களை விரைந்து வெட்டி, கடத்தி அப்புறப்படுத்தியுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, மேற்படி பணியை தடுத்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் 95 சதவீதம் மரங்கள்வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இது சம்பந்தமாக மடுகரை புற காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி துறை அதிகாரி கார்த்திகேசன் செடி கொடிகளைத்தான் அப்புறப்படுத்த சொன்னமே ஒழிய மரங்களை வெட்ட சொல்லவில்லை என்று ஒரு போடு போட்டார். ஆகவே இது சம்பந்தமாக உள்ளாட்சித் துறை இயக்குனர் விசாரித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பல லட்சம் மதிப்புள்ள தேக்க மரங்களை வெட்டிய நபரிடமிருந்து அரசு கையகப்படுத்தி பகிரங்க ஏலம் விடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *