எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் இந்தியா கூட்டணி சார்பாக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரையில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளக்குடி, ஆச்சாள்புரம், புதுப்பட்டிணம், கொள்ளிடம்,தைக்கல் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ்கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பரப்புரையில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன் தலைமையில் நடைபெற்ற வாக்கு சேகரிக்கும் பரப்புரையில் பாராளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது பாராளுமன்ற வேட்பாளர் சுதா பேசுகையில் ராகுல் காந்தி ஆசியோடு தலைவர் மு க ஸ்டாலின் ஆசியுடன் மயிலாடுதுறை பாராளுமன்றத்தில் போட்டியிடுகிறேன் வெற்றி பெற்றால் மகளிருக்கு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் 100 நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறத்துக்கும் விரிவாக்குவோம் எனவும் 100 நாள் வேலை திட்டத்தில் அதிகப்படியாக 400 ரூபாய் கொண்டு வருவோம் எனவும்பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருக்கு மலர் கிட்டினம் வைத்து மாலை அணிவித்து சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்