நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி நபர்கள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி ..
திருவாரூர் நகராட்சி அலுவலக அருகில் நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி நபர்கள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, கொடியசைத்து தொடங்கி வைத்தார்


பேரணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி நபர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியானது நகராட்சி அலுவலக அருகில் தொடங்கி திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது.
அதனைத்தொடர்ந்து அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகம் அடங்கிய தூண்டுபிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, பொதுமக்களுக்கு வழங்கினார் நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலமுருகன் மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் புவனா வட்டாட்சியர் செந்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *