அலங்காநல்லூரில் தேனி பாராளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை பிரச்சாரம்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்
கேட்டுகடை சந்திப்பு பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தேனி பாராளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு கொளுத்து வெயிலில் குடை பிடித்து வாக்கு சேகரித்தார் தொடர்ந்து அவர் பேசியதாவது கடந்த 10 ஆண்டுகளாக மோடி நடத்தியது மோசடி அரசாங்கம் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் நடக்கின்ற இந்த தர்மயுத்தம் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற உள்ளது

வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் நீட் தேர்வில் மாநில அரசு அதனை முடிவு செய்து அதற்கான தீர்வு காணலாம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது

அதேபோல் மக்களிடமிருந்து பணத்தை எடுப்பவருக்கும் மக்களுக்காக பணத்தை அதிகாரத்தை மக்கள் நல திட்டங்களை கொடுப்பவருக்குமான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது மக்களிடம் இருந்து வங்கிக் கணக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெட்ரோல் டீசல் ஆடம்பர ஆபரண பொருட்கள் விட்டு அனைத்து வகையிலும் வரி வரி வரி என விதித்து பணத்தை கொள்ளை அடித்துள்ளது

பாஜக அரசாங்கம் அதேபோல் தேர்தல் பத்திர மோசடிகளும் அதிக அளவில் ஈடுபட்டு இன்று லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை பாஜக தனது கட்சி நிதியில் சேர்த்துள்ளது இத்தகைய அராஜக மோடி அரசாங்கத்தை இந்தியாவிலிருந்து விரட்டுவதற்கு தான் இந்தியா கூட்டணி அமைந்துள்ளது எனவே இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் அதே போல் தேனி பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் அமோக வாக்குகள் பெற்று இரண்டு லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று பேசினார்.

இதில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், வட்டார தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, மாநில நிர்வாகி ஜெயமணி, மனித உரிமை மாவட்ட தலைவர் சரந்தாங்கிமுத்து, முன்னாள் வட்டாரத் தலைவர் மலைக்கனி, நகரத் தலைவர்கள் சசிகுமார், பாலமேடு வைரமணி, மற்றும் சந்திரசேகர், மகிலா காங்கிரஸ் மகளிர் அணி செல்லப்பாசரவணன், மற்றும் நிர்வாகிகள் திரவியம், வாடிப்பட்டி குருசாமி, முருகானந்தம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *