மாதவரத்தில் முதியவரிடம் 2 சவரன் தங்க நகை , மோதிரத்தை பறித்த பெண் உட்பட நான்கு பேர் கைது.

மாதவரம் அருகே முதியவரிடம் நைசாக பேசி அவரிடம் இருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை அரை சவரன் மோதிரம் பறித்த நான்கு பேரை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

பெரம்பூர் , லோகோ இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 64) இவர் தென்னக ரயில்வேயில் விஜிலென்ஸ் பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

இவர் கடந்த 12 ம் தேதி அன்று கொளத்தூர் ரெட்டேரி அருகில் உள்ள வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனது இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமத்தினை புதுப்பிக்க சென்றார் .

அந்த அலுவலகத்திற்கு அருகில் ஆர். டி.ஓ புரோக்கரான ஜெய்சங்கர் என்பவர் வீடு எலிசபெத் நகரில் உள்ளதால் அவரை பார்த்து தனது உரிமத்தினை கொடுக்க நடந்து சென்ற போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் அவருக்கு உதவுவதாக கூறி நைசாக பேச்சு கொடுத்து திடீரென கையால் அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த அணிந்திருந்த தங்கச் செயினையும் ,மோதிரத்தையும் கழற்ற சொல்லி மிரட்டினர்.

முதியவர் அவர்களிடமிருந்து தப்பிக்க உடனே தனது நகையையும் மோதிரத்தையும் கழற்றி கொடுத்தவுடன் அங்கிருந்து இருவரும் நைசாக நழுவி தனது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சிட்டாய் பறந்தனர்.

இச்சம்பவம் குறித்து முதியவர் ரத்தினம் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து ஆராய்ந்து குற்றவாளிகளை தேடி வந்தார்.

இது பற்றிய தகவல் காவல் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதின் பேரில் புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையிலான தனிப்படை போலீசார் அருகில் உள்ள சுமார் 15 க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்தும் இருசக்கர வாகனத்தின் பதிவு என்னை கொண்டு விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்த நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகே சுற்றி திரிந்த திரு வி க நகரை சேர்ந்த சிவகுமார் (வயது 56. ) பெரம்பூர் கார்டன் நான்காவது தெருவையை சேர்ந்த தேவதாசன் (வயது 25 ) பொன்னேரி பாலாஜி நகரை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஜெய் ஸ்ரீ (வயது 23) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு சவரன் நகையை பறிமுதல் செய்து இவர்கள் உபயோகப்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதன்பின் இதுகுறித்து மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜன் இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *