பாஜக மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது என்பதால் தமிழகத்தில் திமுகவுக்கு பாஜக மீது பயம் வந்துள்ளது பாஜகவின் பிரசாரத்தை தடுக்கும் அளவுக்கு திமகவுக்கு பயமும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது என நெல்லை பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெற்று வரும் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் நெல்லை( நயினார் நாகேந்தின்) தென்காசி ( ஜான் பாண்டியன்) விருதுநகர்( ராதிகா சரத்குமார், தூத்துக்குடி( விஜயசீலன்) கன்னியாகுமரி ( பொன்ராதாகிருஷ்ணன்) ஆகியோரை ஆதரித்து பேசினார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
இனிய தமிழக சகோதர சகோதரிகளே வணக்கம், புன்னிய பூமியான திருநெல்வேலியில் முதலில் நெல்லையப்பர் காந்திமதி அம்மாளுக்கு வணக்கம். வரலாற்று பெருமை மிக்க நெல்லை மண் மாற்றத்தின் குரலாக உள்ளது. உங்கள் உற்சாக உங்கள் வரவேற்பு பார்த்த உடன் திமுக இந்திய கூட்டணியினருக்கு தூக்கமே தொலைந்து போயிருக்கும். நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடிப்பீர்கள் அந்த தமிழ் புத்தாண்டில் தான் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டோம் அதில் தமிழகர்களின் முன்னேற்றத்துக்கு பல நலத்திட்டங்களை உங்களுக்காக தந்துள்ளோம் ஏழைகளுக்கு 3 கோடி வீடு கட்டி தர முயற்சி முத்ரா கடன் திட்டம் அதிகரிப்பு பல திட்டங்களை தர இருக்கிறோம் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக மிக கடுமை உழைத்து பல நல்ல திட்டங்களை தந்துள்ளோம் திருநெல்வேலியில் பாரத் எக்ஸ்பிரஸ் ஓடி கொண்டிருக்கிறது இதனால் இப்பகுதி மக்கள் முன்னேற்றமடைந்துள்ளனர் மிக விரைவில் இந்த பகுதியில் புல்லட் ரயில் தொடங்க யோசித்து வருகிறோம். மீண்டும் ஆட்சி அமைத்ததும் அந்த பணி தொடங்கும் கடந்த 10 ஆண்டில் தமிழக தாய்மார்கள் சகோதரிகள் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று எல்லோரும் ரொம்ப ஆச்சர்யப்படுகிறார்கள் பலர் இதற்கான காரணம் என்ன என்றும் எப்படி ஆதரவு பெருகிறது என எல்லோரும் சர்வே படித்து குழம்பி போயிருக்கிறார்கள் நான் பெண்கள் படும் துன்பத்தை சிரமத்தை கடந்த 10 ஆண்டில் 1.25 கோடி குடிநீர் இணைப்பு இணைப்பு கொடுத்துள்ளோம். 40 லட்சம் பேருக்கு காஸ் இணைப்பு 58 லட்சம் கழிவறைகள் கட்ட நிதி கொடுத்துள்ளோம் கர்ப்பினி பெண்களுக்கு 800 கோடி நிதி கொடுத்துள்ளோம் இப்படி செய்தால் அவர்களின் அன்பு ஏன் கிடைக்காது. இங்க ஒரு குழந்தை பாரதமாத வேடமணிந்து நம் முன்னோனி வத்து பாருங்கள் தமிழ் கலாச்சாரத்தை சேசிக்கும் கட்சி பாஜக அதனை அறிந்து தமிழ் மொழியை உலக அளவில் அங்கீகரித்து தருவதாக கூறியுள்ளோம் தமிழக பாரம்பரியத்தை உலக சின்னத்தில் இடம் பெற உள்ளது உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்ற கலாச்சார மையம் ஏற்படுத்தப்படும் இந்தி கூட்டணியில் திமுக காங்கிரஸ் எப்படி அவர்களின் சிந்தாந்தமே வெறுப்பினை எதிர்ப்பினை உருவாக்கி தமிழ் பாராம்பரியத்தை பண்பாட்டை அழிக்க பார்க்கிறார்கள் அது செங்கோலாக இருக்கட்டும் ஜல்லிக்கட்டாக இருக்கட்டும் திமுக காங்கிரஸ் எப்படி பார்த்தார்கள் என நினைத்து பார்க்க வேண்டும். தென் தமிழ்நாட்டில் பொங்குகிற வீரமும் தேசப்பற்றும் நினைவுக்கு வருகிறது. மருது சகோதர்ர்கள் வீரபாண்டிய கட்டப் பொம்மனாக இருக்கட்டும் எப்படி துணிச்சல் மிகுந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்கள் நமது முத்துராமலிங்க தேவர் போன்றோர் இந்தியா வலிமையான வளமான நாடாக வர வேண்டும் என நினைத்தார்கள் இந்தியாவை எதிர்த்த எதிரிகளுக்கு அவர்கள் பாசையிலையே பதிலடி கொடுக்கிறோம் ஜி 20 மாநாட்டால் இந்தியா மிகப்பெரிய பெருமை கொள்கிறது இந்தியா மீது பற்று வைத்துள்ள ஒவ்வோருவருக்கும் பாஜக நான் பிடித்த கட்சியாக இருக்கும். பாஜக எப்போது தமிழ் மொழியை தமிழ் மக்களை மிக நேசிசிக்கும் கட்சி அதனால் தான் தமிழகம் வரும் போதெல்லாம் பாஜக மிகபெரிய உற்சாகம் அடைகிறது இந்தியா தன்னிறைவு பெற போராடிய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியை நினைத்து பார்க்கிறேன் அவர் வழியில் தான் பாதுகாப்பு துறையில் இந்தியா தன்னிறைவு பெற தமிழகத்தில் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்க இருக்கிறோம். காமாரஜரை பின்பற்றி தான் பாஜக நேர்மையான தூய்மையான ஆட்சியை தருகிறது ஆனால் காங்கிரஸ் திமுக காமராஜரை அவமதித்து தான் வருகிறது. எம்ஜிஆர் என்ற மாபெரும் தலைவரின் கனவுகளை பாஜக முன்னெடுத்து செல்கிறது எம்ஜிஆரையும் திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் எவ்வளவு தேச விரோத செயல்களை செய்து வருகிறார்கள் கச்சத்தீவு தமிழகத்தின் உயிர் நாடியான பாரதத்தை திரைமறைவில் வேறு நாட்டிற்கு கொடுத்து விட்டார்கள் திமுக காங்கிரஸ் செய்த வரலாற்று பிழை மறக்க முடியாத பாவமாக நினைக்கிறேன். அவர்கள் செய்த பாவத்தால் மீனவர்கள் பயன்படுத்தி வந்த நிலத்தக திரைமறைவில் தாரை வார்த்துள்ளனர் இதை பாஜக தான் சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. போதையை நோக்கி தமிழ்நாடு போய் கொண்டிருக்கிறது குடும்ப அரசியலில் உள்ளவர்கள் போதை மருந்தை ஊக்கப்படுத்துகிறார்கள் இதனால் மிகப்பெரிய சோகத்தை தமிழகம் சந்தித்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுகிறார்கள் அதிகாரமிக்கவர்களின் அனுமதியோடு போதை பொருள் தலைவிரித்தாடுகிறது போதை பொருள் என்ற விஷம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. போதை மாபியாக்கள் யாரோட பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட செல்லும் மோடி இதை வேடிக்கை பார்க்க மாட்டேன் போதையை தேசத்தை விட்டே ஒழிப்பேன். நாட்டின் இளம் தலைமுறையினரை போதையில்லாத உலகத்துக்கு பாஜக அழைத்து செல்லும் உங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்றால் வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த தமிழகம் வேண்டும் என்றால் பாஜகவை ஆதரிக்க வேண்டும் இந்த தேர்தலில் இந்த கூட்டம் தான் தமிழக மக்களை நான் சந்திக்கும் கடைசி கூட்டம். நீங்கள் முழு மனதோடு எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவை தருகிறீர்கள் புதிய வரலாறை தர போகிறீகள் பாஜக தமிழகத்தில் எங்க இருக்கிறது என்று கேட்டார்கள் அவங்க முகத்தில் கரிய பூசுற மாதிரி அவர்கள் அதிர்ச்சி அடையுற மாதிரி நீங்கள் பெரிய ஆதரவு தரப்போகிறீர்கள் அவர்களிடம் ஒரே ஒரு பழைய டேப்ரிகாடு உள்ளது அதில் ஒரே பல்லவியை எதிர்ப்பு பாட்டை மட்டும் திரும்ப திரும்ப போட்டு வருகிறார்கள் அவர்கள் கொடுத்ர வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை மக்கள் தேவைகளையும் நிறைவேற்ற முடியவில்லை அவர்கள் எப்படி ஆட்சி நடத்துவார்கள் எத்தனையோ புதிய வாக்காளர்கள் இருக்குறீர்கள் நீங்கள் ஒரே ஒரு முறை பாஜவுக்கு வாக்களியுங்கள் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிசமும் உங்களை சிந்திக்க போகிறேன். 24 மணி நேரமும் எனது இலக்கு உங்களை பற்றி தான் இருக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் வரவேற்பும் குரலையும் கேட்கும்போது இது தேர்தல் கூட்டமாக தெரியவில்லை வெற்றி கூட்டமாக தெரிகிறது.
பாஜக மிகப்பெரி வெற்றி பெற போகிறது ஆனால் திமுகவுக்கு பயம் பதட்டம் வந்துள்ளது உங்கள எல்லோரையும் பார்த்து பயப்படுகிறார்கள் பாஜ பிரசாரத்தை தடுக்கிறார்கள் அந்தளவுக்கு பயப்படுகிறார்கள் பாஜக காரியகர்த்தாக்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன் மொத்த தமிழ்நாடும் உங்கள் பின்னால் இருக்கிறார்கள் நான் இருக்கிறேன் துணிச்சலோடு பிரசாரத்தை முன்னெடுக்ககலாம் என்று பேசினார்.

மோடி பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்த பலர் மோடி மோடி என கோஷமிட்டனர் இதனால் உற்சாகமடைந்த மோடி அனைவரையும் டார்ச் லைட் அடிக்க கேட்டு கொண்டார் உடனே அனைவரும் எழுத்து நின்று டார்ச் லைட் அடித்தனர். தொடர்ந்து பேசிய மோடி, இருட்டு அறையில் உட்காந்து கொண்டிருக்கும் இந்தி கூட்டணிக்கு நீங்கள் காட்டும் வெளிச்சம் டெல்லி வரை தெரியும் என்று பேசினார். பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி சரத்குமார் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *