மாதவரம் மாநகராட்சியின் சார்பில் கோடைகால வெப்ப பாதிப்புகளை தடுக்க பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.

கோடை கால வெப்ப அலை மற்றும் கடுமையான வெப்ப பாதிப்புகளை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு வாசகங்கள் எழுதிய துண்டு பிரசுரம் வழங்கியும் முக்கிய இடங்களில் சுவர்களில் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.‌

பொதுவாக பொதுமக்கள் உடலில் நீர் சத்துக்கள் குறையாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும்,மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகள் அணியவும்,

ஓ ஆர் எஸ் ஜூஸ் எலுமிச்சை பழச்சாறு இளநீர் நீர்மோர் ஆகியவைகளை பருகவும் ,முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும்,வெளியில் செல்லும்போது தொப்பி குடை காலணிகள் அணிந்து செல்லவும் ,பருவ கால பழங்கள் காய்கறிகள் வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும் எனவும்,நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் அமரவும் அறிவுறுத்தி துண்டு பிரசுரங்களை மாதவரம் மண்டல அதிகாரி திருமுருகன் சுகாதாரத்துறை அலுவலர் இளஞ்செழியன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அலுவலர்கள் மீனாட்சிசுந்தரம், பீர்முகம்மது ,மாரிமுத்து , பிரியா, ரமேஷ்ராஜா உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *